கொக்கு இறைச்சி சாப்பிட்ட நர்சிங் கல்லூரி மாணவி பலி.. விக்கல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

 
கொக்கு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், வயல்வெளியில் சேற்றில் சிக்கிய கொக்கைக் கொண்டு சென்று தந்தை சமைத்துக் கொடுத்த இறைச்சியைச் சாப்பிட்ட நர்சிங் மாணவி, அடுத்தடுத்து தொடர்ந்து விக்கல் ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

வந்தவாசி பொன்னாங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி ஜெயலட்சுமி(38). இவர்களுடைய மகள் அஸ்வினி (18) சென்னை மயிலாப்பூரில் உள்ள டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

Crane fry

தற்போது கோடை விடுமுறை தினங்கள் என்பதால் சொந்த ஊரில் வீட்டில் அஸ்வினி இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த  மே14ம் தேதி வயலுக்குச் சென்ற ராஜவேல், வயல் சேற்றில் சிக்கி கிடந்த கொக்கு ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். பின்னர் அதை சமைத்து தனது மகளுக்கு கொடுத்துள்ளார். கொக்கு கறியைச் சாப்பிட்ட அஸ்வினிக்கு திடீரென விக்கல் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் குடித்தும், நீண்ட நேரமாகியும் அஸ்வினிக்கு விக்கல் நிற்காததால், அஸ்வினியை உறவினர்கள் உத்திரமேரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்படியும் உடல்நிலை சரியாகாத நிலையில், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Kilkodungalore PS

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் ஜெயலட்சுமி கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web