அதிர்ச்சி!! கல்லூரி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி!!

 
கோவை விபத்து

கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் செயல்பட்டு வருகிறது  ஸ்ரீ கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி. இந்த   கல்லூரி வளாகத்திற்குள்ளேயே செயல்பட்டு வரும் மாணவர் விடுதி அருகே அமைந்திருக்கும் சுற்றுச்சுவர்  பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது வலுவிழந்து விட்டதால்,  அதன் அருகிலேயே  5 அடி தூரத்தில் கான்கிரீட்டால் ஆன மற்றொரு சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த சில வாரங்களாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணியில்  ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கோவை விபத்து

நேற்று ஆந்திராவை சேர்ந்த கொல்லி ஜெகநாதன்,  நக்கிலா சத்யம் , ரப்பாகா கண்ணையா , மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஸ்கோஸ் , பருண் கோஸ்  ஆகியோர் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக அஸ்திவாரத்திற்காக  தோண்டிக் கொண்டிருந்தனர்.  மற்றவர்கள் கல்லூரி வளாகத்தில் புதிதாக கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நேற்று மாலை   திடீரென பயங்கர சத்தத்துடன், புதிதாக கட்டப்பட்டு வரும் சுவரின் அருகே இருந்த பழைய சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்களும் சிக்கி  வெளியில் வர முடியாமல் தவித்தனர். சக தொழிலாளர்களும், மக்களும்  இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் கொல்லி ஜெகநாதன், நக்கிலா சத்யம், ரப்பாகா கண்ணையா, பிஸ்கோஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். பருன்கோஸ் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

கோவை விபத்து

இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.  உடல்களை பார்த்து உயிரிழந்தவர்களின்   உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது. சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்களும் சுவர் இடிந்து பலியான சம்பவம் சக தொழிலாளர்கள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  
இந்த விபத்து குறித்து உயிரிழந்த ஜெகநாதனின் மனைவி கொல்லிடமா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுற்றுச்சுவர்  இடிந்து விழ வாய்ப்பு இருப்பதாக கூறியும், எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், திட்ட மேலாளர் சாதிக் குல் அமீர், என்ஜினீயர் அருணாச்சலம் மூவர்   மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலைக்கு பணி அமர்த்துதல், கொலை குற்றம் ஆகாத மரணம் உட்பட   2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web