அதிர்ச்சி... தேர்வு எழுதி கொண்டிருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி !

 
குதித்து தற்கொலை

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி நகர் 2வது தெருவில் வசித்து வருபவர்  தாஜூதீன். இவர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் 19 வயது ஹாசீயா. இவர் சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரியில் (இன்டர்னல் அசிஸ்டென்ட்) தேர்வு நடைபெற்று வருகிறது.  காலை வழக்கம் போல் மாணவி ஹாசீயா கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றார். தேர்வு அறையில் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி திடீரென பாதியிலேயே தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டு வெளியே ஓடிவந்தார். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
அவர் இருந்த  3 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் , சக மாணவர்கள்   ஓடிச்சென்று மாணவி ஹாசீயாவை மீட்டு  பிரபல உள்ள தனியார் மருத்துவமனையில் (இசபெல்லா) சிகிச்சைக்காக அனுமதித்தனர். இடுப்பு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமான முறையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 பள்ளி மானவி தற்கொலை

இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி ஹாசீயாவின்,சகோதரி ஃபாத்திமா என்பவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.  அன்று முதல்  மாணவி சகோதரி இறந்த துக்கம் தாளாமல் மன அழுத்தம் ஏற்பட்டு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. மிகுந்த மனஅழுத்தம் காரணமாக  தொடர் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஹாசீயா இன்று கல்லூரிக்கு தேர்வு எழுத வந்தார். இந்நிலையில் தேர்வை பாதியிலேயே நிறுத்தி விட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது.  .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web