கால்பந்து மைதானத்தில் சுருண்டு விழுந்து கல்லூரி மாணவி பலி…!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று மதியம் ஒரு மணியளவில் கல்லூரி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த வடிவேல் மகள் திவ்யதர்ஷினி (17) கலந்து கொண்டு விளையாடினார். போட்டியின் நடுவே அவர் திடீரென மயங்கி மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக அவரை காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் திவ்யதர்ஷினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
