செமஸ்டரில் மார்க் குறைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை!

 
மாணவி

தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காகப் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த நர்சிங் மாணவி, விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அய்யனாரின் மகள் திவிஷ்யா (20). இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

தற்கொலை

சமீபத்தில் வெளியான செமஸ்டர் தேர்வு முடிவுகளில், திவிஷ்யா எதிர்பார்த்ததை விடக் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், அவரை கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான திவிஷ்யா, கடந்த 7-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார்.

மயக்க நிலையில் கிடந்த அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திவிஷ்யா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!