ஆன்லைனில் வந்த மோசடி விளம்பரம்... நம்பி பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தற்கொலை!
சென்னை கே.கே நகர் அருகே நெசப்பாக்கம் காணு நகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (19), பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தவர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கி கடன் மூலம் மாத தவணை செலுத்தும் வகையில் ரூ.3 லட்சத்துக்குப் பழைய கார் வாங்கிய அவர், ஆன்லைனில் பிரபல தனியார் செயலி விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டார். மர்ம நபர் ரூ35 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக ரூ.85 ஆயிரம் கிடைக்கும் என்று கூறியதால் சுபாஷ் பணத்தை அனுப்பினார்.

பணம் திரும்பி வராததும், மர்ம நபரை மீண்டும் தொடர்பு கொண்ட போது அவர் செல்போன் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த சுபாஷ் தனது பெற்றோர்களிடம் சம்பவத்தை கூறியபோது, பெற்றோர் கடுமையாக கண்டித்தனர். மன வேதனையால் சுபாஷ் தனது படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

சம்பவத்துக்குப் பிறகு எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் வந்த மோசடி விளம்பரத்திற்கு அம்பலமாக பணத்தை இழந்த கல்லூரி மாணவரின் தற்கொலைச் சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
