லாரி, பைக் மீது மோதி கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலி!
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் ஜி.என்.டி சாலையை சேர்ந்த அப்துல் சத்தாரின் மகன் முகம்மது அலி இம்தியாஸ் (18) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்து செங்குன்றத்தில் உள்ள உறவினரை பார்க்க பைக்கில் புறப்பட்டார். மதுரவாயல்–புழல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். குடும்பத்தினர் அவரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

கதிர்வேடு அருகே சூரப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் சென்றபோது பின்னால் வந்த டிரெய்லர் லாரி வேகமாக மோதியது. தாக்குதலில் அவர் கீழே விழுந்தார். அதன்பின் லாரி சக்கரம் ஏறி இறங்கியதால் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் செந்தில்குமார் (46) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
