அதிர்ச்சி வீடியோ... பேருந்து மோதி கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மரணம்!

 
சுதர்சனா
 

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்கூட்டரில் சாலையைக் கடந்து சென்ற கல்லூரி மாணவி மீது எதிர்புறத்தில் ஓவர் டேக் செய்து வந்த பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான பேருந்தில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பதைபதைக்க வைக்கிறது. 

நெல்லை அருகே மானூரை அடுத்த வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பால்துரை, கூலி தொழிலாளியான இவருடைய மனைவி எஸ்தர் மேரி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் 3வது மகள் செல்வம் (19), பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் சுதர்சனா (15), நெல்லை டவுனில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலையில் செல்வம் தனது தங்கை சுதர்சனாவை பள்ளியில் விடுவதற்காக தனது மொபட்டில் நெல்லை -சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள சிவாஜிநகர் பேருந்து நிறுத்தத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வந்த டவுன் பஸ்சில் சுதர்சனா ஏறியதும், அந்த பேருந்தின் முன்பாக செல்வம் தனது மொபட்டில் சாலையை கடக்க முயன்றுள்ளார். 

அப்போது சுரண்டையில் இருந்து அழகியபாண்டியபுரம் வழியாக நெல்லை நோக்கி சென்ற தனியார் பேருந்து, நின்றுக் கொண்டிருந்த பேருந்தை ஓவர்டேக் செய்து சாலையில் அடுத்தப் பக்கத்தில் வந்ததில் சாலையைக் கடக்க முயற்சித்த செல்வம் மீது மீது பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மொபட் பேருந்தின் அடியில் சிக்கி கிடந்தது.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து மானூர் போலீசாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த கல்லூரி மாணவி செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பேருந்தின் ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த நாஞ்சில் ராஜாவை (28) கைது செய்தனர்.உயிரிழந்த செல்வத்தின் உடலைப் பார்த்து தங்கை சுதர்சனா மற்றும் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. 

சுதர்சனா

மொபட் மீது மோதிய தனியார் பஸ்சின் முன்பக்க கேமராவில் விபத்து குறித்த வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில், சாலையோரம் நின்ற அரசு டவுன் பேருந்தை அசுர வேகத்தில் தனியார் பேருந்து முந்தி சென்றபோது, சாலை கடக்க மொபட்டில் வந்த செல்வத்தின் மீது மோதிய காட்சி நெஞ்சை பதைபதைக்கும் வகையில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை அருகே மொபட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web