பேருந்து மோதி கல்லூரி மாணவி துடிதுடித்து மரணம்... தப்பியோடிய ஓட்டுநர்!

 
தேஜாஸ்ரீ

தனியார் பேருந்து ஒன்று, பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி தேஜாஸ்ரீயின் மீது மோதியதில், தடுமாறி கீழே விழுந்த மாணவி, பேருந்தின் சக்கரம் ஏறி, துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நேர்ந்ததும், தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை பூந்தமல்லி அருகே கடந்த இரண்டு நாட்களில் ஒரே இடத்தில் 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

சென்னை பெரம்பூர், எம்.எஸ்.எம். தெருவைச் சேர்ந்தவர் தேஜாஸ்ரீ(22). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பயிற்சி வேலையும் செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் தனியார் நிறுவன பேருந்து ஒன்று ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்தது.

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே மாணவி சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் நிறுவன பேருந்து அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், மாணவி தேஜாஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பேருந்து சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவி தேஜாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தேஜாஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து, தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். தொடர்ந்து இந்த பகுதியில் விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனைத் தடுக்க இந்த பகுதியில் போக்குவரத்து போலீஸார், பணியில் அமர்த்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்களில் இந்த பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web