பிறந்த நாளில் மயங்கி சரிந்து கல்லூரி மாணவி பலி... கதறித் துடிக்கும் பெற்றோர்!

 
ஸ்ரேயா


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிராவட்டம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ராஜன்-பிந்து .  இவர்களுடைய மகள் ஸ்ரேயா 12 ம் வகுப்பு படித்து முடித்துள்ளாள். இவர் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில் கல்லூரியில் பட்டப்படிப்பு படிப்பில் சேர தயாராக இருந்தார்.
ஜூன் 13ம் தேதி ஸ்ரேயாவுக்கு பிறந்தநாள்.

மாரடைப்பு

 அன்றைய தினம் காலை நேரத்தில் குளிப்பதற்காக பாத்ரூம் சென்ற நிலையில் திடீரென அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பிந்து உடனடியாக தன்னுடைய மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள்  ஏற்கனவே ஸ்ரேயா உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

ஆம்புலன்ஸ்

 மாணவி இதய பிரச்சினை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள்  கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பிறந்தநாள் அன்றே மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும்  ஏற்படுத்தியுள்ள நிலையில் குடும்பமே  துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது