அதிர்ச்சி வீடியோ.. அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி!
ஈரானில் பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து, திடீரென அரைகுறை ஆடைகளுடன் கல்லூரி மாணவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களில் இது குறித்து வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
In Iran, a student harassed by her university’s morality police over her “improper” hijab didn’t back down. She turned her body into a protest, stripping to her underwear and marching through campus—defying a regime that constantly controls women’s bodies. pic.twitter.com/xDXslW1uZ5
— Arash Mehrban (@ArashMehrbann) November 3, 2024
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியை கைது செய்தனர்.
2022ம் ஆண்டில், ஹிஜாப் அணியாததற்காக 22 வயது பெண் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்த போது மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நாட்டில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் ஆடையைக் கழற்றியதாகக் கூறிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், மனநலம் பாதிக்கப்பட்டதால் ஆடைகளை களைந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
