கல்லூரி மாணவி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழப்பு.. போராட்டத்தில் குதித்த மாணவர்களை வெளியேற்றிய நிர்வாகம்!

 
புவனேஸ்வர் பொறியியல் கல்லூரி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை, நேபாளத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி பிரகிருதி லாம்சல் தனது விடுதி அறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி, கல்லூரியில் படிக்கும் மற்ற நேபாள மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்களுக்கு மத்தியில் வளாகத்தில் நிலைமை மோசமடைந்ததால், கல்லூரி நிர்வாகம் அனைத்து நேபாள மாணவர்களையும் விடுதியில் இருந்து வெளியேற்றி, அவர்களின் பயணத்திற்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் கட்டாக் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கல்லூரி நிர்வாகம் இதற்கு பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக, “கல்லூரி வளாகத்தில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்த உடனேயே, போலீசார் இந்த விவகாரத்தை விசாரித்து குற்றவாளியைக் கைது செய்தனர். பல்கலைக்கழக நிர்வாகம் வளாகத்திலும் விடுதிகளிலும் இயல்பு நிலையை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வளாகத்தை விட்டு  வெளியேற திட்டமிட்டுள்ள அனைத்து நேபாள மாணவர்களும் திரும்பி வந்து வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்” என்று அது கூறியது. இதற்கிடையில், "நேபாள மாணவர்களை சிறப்பு பேருந்துகள் மூலம் புவனேஸ்வருக்கு அழைத்து வர பல்கலைக்கழகத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது," என்று மாநில உயர்கல்வி அமைச்சர் சூர்யபன்ஷி சூரஜ் கூறினார்.

அதன்படி, மாணவர்களின் கல்வி இழப்புகளை கல்லூரி நிர்வாகம் கவனித்துக் கொள்ளும் என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இறந்த மாணவியின் தந்தை கல்லூரி  நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, இந்த விஷயம் நேபாள பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் அந்நாட்டு அரசு  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார். 'மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்க முடிவு செய்தால் அல்லது தங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப முடிவு செய்தால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' என்றும் அவர் கூறினார். இந்த சூழ்நிலையில்,  அந்நாட்டு தூதரக அதிகாரிகள் இறந்த மாணவி படித்து வந்த தனியார் பொறியியல் கல்லூரியை நேரில் பார்வையிடுவார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட மாணவர்களையும் சந்திப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web