பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்... கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 
ஈரோடு
 

ஈரோடு அறச்சலூர் அருகே கருமாண்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் செந்தூர் வர்ஷன் (17). ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்த அவர், பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததாக தகவல். இதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இதனால் மன உளைச்சலில் சிகிச்சை பெற்றும் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், வீட்டில் செந்தூர் வர்ஷன் தூக்குப்போட்டு கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ்

ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!