கல்லூரி மாணவி கர்ப்பம்... பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கைது!

 
மாணவி
 

 

உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கர்ப்பமான நிலையில், பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர் அருகேயுள்ள மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு நாமக்கல்லைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (45) என்பவர் உதவி பேராசிரியராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து தாழம்பூர் போலீசாருக்கு , “இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்து அபார்ஷன் செய்து உள்ளதாகவும், அதில் சிக்கல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்” தகவல் அளிக்கப்பட்டது.

ராஜேஷ்

இதையடுத்து தாழம்பூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் என்பவர் தன்னிடம் பழகி வந்ததாகவும் இதில் தான் கர்ப்பம் அடைந்து விட்டதாகவும், கடந்த மாதம் 3ம் தேதி உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் திருமணம் செய்து கொண்டதால் தனது கர்ப்பத்தை கலைத்து விட்டதாகவும், இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார். 

ஆம்புலன்ஸ்

இதையடுத்து சென்னையில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் (45) என்பவரை கைது செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?