'லிப்ட்' கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்... பீர் பாட்டிலால் தாக்கிய கொடூரம்.. பெங்களூரில் அதிர்ச்சி!
பாதுகாப்பற்ற சூழலில் அறிமுகமில்லாத நபர்களிடம் உதவி கோருவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் விதமாக ஒரு அதிர்ச்சிச் சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பெரேசந்திரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தந்தை இல்லாத நிலையில் கஷ்டப்பட்டுப் படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காகப் பெரேசந்திரா கிராஸ் பகுதியில் பஸ்சுக்காகக் காத்து நின்றார்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிக்பள்ளாப்பூரைச் சேர்ந்த கணேஷ் (29) என்பவர், மாணவியை வீட்டில் விடுவதாகக் கூறி லிப்ட் கொடுத்துள்ளார். மாணவியும் அதை நம்பி வண்டியில் ஏறியுள்ளார்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வண்டியைக் கொண்டு சென்ற கணேஷைக் கண்டு மாணவி அச்சமடைந்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் மாணவியைச் சரமாரியாகத் தாக்கிய கணேஷ், அவர் மயக்கமடைந்த நிலையில் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த மாணவி தனது நண்பர்களுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் மூலமாகப் போலீசாருக்குப் புகார் சென்றது.

சிக்பள்ளாப்பூர் போலீஸார் தனிப்படை அமைத்துக் கணேஷைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இறுதியில் அவர் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுகாயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
