2 வருடங்களாக கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்... வன்மத்தைக் கொட்டிய பேராசிரியர்!
தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக கல்லூரி மாணவி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த பேராசிரியர், மாணவியின் பயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து செக்ஸ் தொல்லைக் கொடுத்து வந்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலம் பெலகாவியை அதிர செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நாகேஷ்வர். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் முதலில் நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்த நட்பைப் பயன்படுத்தி, மாணவியிடம் ஆசை வார்த்தைகளைச் சொல்லி, நாகேஷ்வர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை அவர் கடுமையாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி, இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் கூறாமல் தனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்துள்ளார்.

பேராசிரியர் நாகேஷ்வர், மாணவியின் இந்தப் பயத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். அவர் தொடர்ந்து அந்த மாணவியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டிப் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் சுமார் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்துள்ளது. பேராசிரியரின் தொடர் தொல்லை தாங்க முடியாத நிலையில், அந்த மாணவி இறுதியாகத் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைக் கூறி கதறி அழுதுள்ளார்.

மகளின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி உடனடியாகக் கேம்ப் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாகச் சம்பந்தப்பட்ட பேராசிரியர் நாகேஷ்வரைக் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட நாகேஷ்வரைக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். கல்வி நிலையங்களில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெலகாவி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
