விஜய் கூட்டத்திற்கு சென்ற வழியில் கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் படுகாயம்!

 
தவெக

 

விஜய் கலந்து கொண்ட தஞ்சை கூட்டத்திற்கு சென்ற கட்சியினர் ஐந்து பேர் வாகன விபத்தில் படுகாயமடைந்தனர். வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட இந்த விபத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின. காயமடைந்தவர்கள் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தவெக

கல்லூரிக்கு செல்கிறேன் என கூறி சென்ற மகன் விபத்தில் சிக்கியதாக தந்தை பாண்டியன் வேதனையுடன் தெரிவித்தார். திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கும் விக்னேஷ் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறினார். விஜயை பார்க்க பின்தொடர்ந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். தலையில் கடும் காயம் ஏற்பட்டதால் 48 மணி நேரம் கண்காணிப்பில் வைத்துள்ளனர் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பு அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வேகமும் அவசரமும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. காவல்துறை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!