மத்த பசங்களோட பேசறது பிடிக்கல... சக மாணவியை வகுப்பறையில் கத்தியால் குத்தி கல்லூரி மாணவன் தப்பி ஓட்டம்!
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக் ஐ.டி. முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவருடன் கடந்த 3 மாதமாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே மற்றொரு மாணவர் அந்த மாணவியிடம் காதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி அதை மறுத்தாலும் நட்பு முறையில் பேசி வந்துள்ளார்.

இந்த விஷயம் காதலனுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இனிமேல் அந்த மாணவருடன் பேசக்கூடாது என காதலன் எச்சரித்துள்ளார். ஆனால் மாணவி தொடர்ந்து நட்பாக பேசியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் நீடித்தது.

இந்த நிலையில் நேற்று காலை வகுப்பறையில் மாணவி மற்றொரு மாணவருடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த காதலன் ஆத்திரமடைந்தார். உடனே பையில் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மாணவியின் கன்னம் மற்றும் கையில் குத்திவிட்டு தப்பி ஓடினார். காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனை கைது செய்தனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
