கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து... பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

 
சேலம்

 தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் எப்போது பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள இடம். இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சேலம்

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மோகனப்பிரியன் என்பவர் தனது கையை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார்.  படுகாயம் அடைந்த கல்லூரி மாணவிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆம்புலன்ஸ்

இதேபோல் கையை கத்தியால் அறுத்ததில் படுகாயம் அடைந்த பிரியன் என்ற இளைஞரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பிரியன் என்ற இளைஞரும், அந்த கல்லூரி மாணவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனர். இது காதலாக மாறியதாகவும், பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியன் அந்த மாணவியை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web