காதலியை சுட்டுக் கொன்று கல்லூரி மாணவன் தற்கொலை!! கல்லூரி வளாகத்தில் பயங்கரம்!!

 
நேஹா

இந்தியாவின் வடமாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள், துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் பெரும் அச்சத்துடன் நடமாட வேண்டியிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். தலைநகர் டெல்லியில் நொய்டாவில் செயல்பட்டு வருகிறது தனியார் பல்கலைக்கழகம். இந்த  பல்கலைக்கழகத்தில் இளநிலை சமூக அறிவியல் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர் அஞ்சு சிங்கும்,  அதேவகுப்பில் நேஹா என்ற மாணவியும்  காதலித்து வந்தனர். அதேவேளை, காதலர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நிலவி வந்ததாக தெரிகிறது.

துப்பாக்கி

 இருவரும் பல்கலைக்கழகத்தின் கேன்டினில் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் கத்தி கூச்சலிட்டதால் சக மாணவர்கள் பிரச்சனை என்பதை அறிந்து கொண்டனர்.  தகராறு முற்றியதில்  அஞ்சு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காதலி நேஹாவை சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சகமாணவர்கள் கூடியதில் உடனே அந்த இடத்திலிருந்து தான் தங்கியிருந்த ஆண்கள் மாணவர்  விடுதிக்கு சென்று அஞ்சு தனது அறையில் துப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆம்புலன்ஸ்

கல்லூரி வளாகத்தில் காதலியை சுட்டுக்கொன்ற கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பெற்றோர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  காவல்துறையினர் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web