பைக் டிராக்டரில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி!
புளியங்குடி அருகே முள்ளிக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சுபாஷின் மகன் தருண்குமார் (18), புளியங்குடி பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வரும் சுபாஷுக்கு ஒரே மகனாக இருந்த தருண்குமார், நேற்று முன்தினம் இரவு நண்பருடன் பைக்கில் வெளியே சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், தலைவன்கோட்டையை சேர்ந்த சூர்யா (18) என்பவருடன் புளியங்குடி–சங்கரன்கோவில் சாலையில் உள்ள பல்க்கில் பெட்ரோல் நிரப்ப சென்ற தருண்குமார், பின்னர் பாம்புகோவில் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். இரவு நேரத்தில் சாலை இருள் சூழ்ந்திருந்த நிலையில், முன்னால் இரும்பு கலப்பையுடன் டிராக்டர் சென்றதை கவனிக்காமல் பைக் சென்றதாக கூறப்படுகிறது.

திடீரென டிராக்டரை பார்த்த சூர்யா பிரேக் பிடித்தபோது, பின்னால் அமர்ந்திருந்த தருண்குமார் தூக்கி வீசப்பட்டு இரும்பு கலப்பையில் மோதி தலையில் படுகாயம் அடைந்தார். புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூர்யா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
