கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர்கள் மீது புகார்!

 
சிறுமிக்கு பாலியல் சீண்டல்

கல்லூரி மாணவிகளுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் என்று மனு எழுதி, முதலமைச்சரின் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ளனர்.

மாணவி பாலியல் வழக்கு!! ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது  குண்டர் சட்டம்!!

இது தொடர்பான அந்த மனுவில், "சித்த மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக இறுதியாண்டு படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்கள். செல்போனில் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்கள். தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் கல்லூரிக்கு அருகே ஒரு வீட்டில் வகுப்பு எடுப்பது போல் பாலியல் தொல்லை செய்து வருகிறார்கள். 2 பேராசிரியர்களையும் இடமாறுதல் செய்தால் மட்டுமே மாணவிகள் நிம்மதியாக கல்வி பயில முடியும். இந்த பேராசிரியர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்றுங்கள்" என கூறப்பட்டிருந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web