பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி 3 கல்லூரி மாணவர்கள் பலி... தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து!

 
kaar

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்–தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆம்புலன்ஸ்

தனியார் வேளாண்மை கல்லூரியில் படிக்கும் 6 மாணவர்கள், உதவி பேராசிரியரின் காரில் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி வரை சென்று திரும்பி வந்துள்ளனர். எழுத்தூர் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனை தாண்டி எதிர்திசையில் சென்றது. அப்போது சென்னை–திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.

போலீஸ்

இந்த விபத்தில் தரணி செல்வன், விநாயகம், ரிஷ்வந்த் ஆகிய 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராகேஷ், மதுபிரியன், சசிகுமார் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே பகுதியில் சமீபத்தில் நடந்த விபத்திலும் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!