"சிவன் அழைக்கிறான்"... உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி மாயம்!

 
கல்லூரி கல்லூரி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமாகியுள்ளார். அந்தப் பெண் எழுதியுள்ள கடிதத்தில், "என்னை சிவபெருமான் அழைக்கிறார், நான் அவரிடமே செல்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதிகாலையில் மாணவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், வீடு முழுவதும் தேடியும் அவர் கிடைக்காததால் கதறித் துடித்தபடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மாணவி தனது கடிதத்தில், ஆன்மீக ரீதியான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும், இறைவனைத் தேடிச் செல்வதாகவும் உருக்கமாக எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாகவே அந்த மாணவி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாரா அல்லது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாரா என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவனின் அழைப்பை ஏற்றுச் செல்வதாகக் கூறிவிட்டு இளம் பெண் ஒருவர் மாயமானது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவியின் செல்பான் எண்களை வைத்து அவர் கடைசியாக எங்கு இருந்தார் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அருகில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாகச் சோதித்து வருகின்றனர். மாயமான மாணவியைத் தேடத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பத்திரமாக மீட்கப் போலீசார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த மாணவியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!