“துணிவிருந்தால் கைது செய்யுங்கள்” – டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் நேரடி சவால்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கடுமையாக தாக்கியுள்ளார். துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என அவர் வெளிப்படையாக சவால் விட்டுள்ளார். இந்த கருத்துகள் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
BRUTAL: Colombia's President Gustavo Petro just recklessky TAUNTED President Trump:
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 5, 2026
'Come get me, coward! I'm waiting for you here.' pic.twitter.com/af1pI6rWB4
வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஜன.3 அன்று வெனிசுவேலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த குஸ்டாவோ பெட்ரோ, நான் யாருக்கும் பயப்படவில்லை என கூறினார். படையெடுப்பு, ஏவுகணை தாக்குதல் அனைத்தையும் நான் எதிர்க்கிறேன் என்றார். தாய்நாட்டிற்காக தேவைப்பட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்த தயார் எனவும் கூறி, டிரம்ப்புக்கு நேரடியாக சவால் விட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
