அடேங்கப்...பா!! அசத்தல் வீடியோ!! மணப்பெண்ணின் எடைக்கு எடை தங்கம்!!

 
எடைக்கு எடை

இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் மிக ஆடம்பரமாக நடத்தப்பட்டு வருகின்றன. வாழ்வில் ஒரு தடவை தான் திருமணம் . சந்தோஷமாக இரு என்பது தான் லேட்டஸ்ட் கான்செப்ட். அதே போல் நீருக்கடியில் திருமணம்,பறந்தபடியே திருமணம், கடற்கரையோரத் திருமணம், மணமகன் பறந்து வருவது, மணமகள் டான்ஸ் ஆடி வருவது என பல வகைகளிலும் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடத்தப்பட்ட ஆடம்பரமான பாகிஸ்தான் திருமணம் ஒன்று  நடத்தப்பட்டது. இந்த திருமணத்தில் மணமகளின் எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


ஆனால், தங்கம் போலியானது என்றும் திருமணத்தின் ஒட்டுமொத்த கருப்பொருளின் ஒரு பகுதி மட்டுமே என பின்னர் உண்மை கண்டறியப்பட்டது. தங்கம் அலங்காரத்திற்கு மட்டுமே. இந்திய மக்களை பொறுத்தவரை பெரும் சேமிப்பு பெட்டகம். பாலிவுட் படமான ஜோதா அக்பரில் இப்படி ஒரு காட்சி இடம்பெறும். அதன் அடிப்படையில் இந்த திருமணத்தில் இந்த காட்சி நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ஆடம்பரமான திருமணச் செலவுகளால் குடும்பத்தில் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுவதாகவும், காண்பவர்களின் மனதில் ஏக்கத்தையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

5வது திருமணம்

மேலும் சிலர் திருமண அமைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அதன் படைப்பாற்றல் மற்றும் விவரங்களுக்கு கவனத்தை ஈர்த்தது என பதிவிட்டுள்ளனர். சிலர்  திருமண திட்டமிடுபவர்கள் மிகவும் கடினமாக உழைத்து ஜோதா அக்பர் கருத்தை மறுஉருவாக்கம் செய்வதில் அற்புதமான வேலையைச் செய்ததாகவும் கூறியுள்ளனர்.  மக்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது புத்தகங்களின் அடிப்படையில் தங்கள் கனவு திருமணத்தை ஒரு ட்ரையல் செய்து பார்ப்பதை சமீபமாக இளசுகள் விருப்பமாக இருந்து வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web