ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகர் காலமானார்!

 
jimmy
 

 

ஜிம்மி நியூட்ரானின் ஷீனுக்குக் குரல் கொடுத்த ஜெஃப்ரி கார்சியா இல்லை என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 48 வயதில் அவர் மருத்துவமனையில் காலமானார். பல மாதங்களாக உடல்நல பிரச்சினைகள் தொடர்ந்து வந்ததாக குடும்பம் தெரிவித்தது.

கார்சியாவுக்கு முதலில் மூளை அனீரிஸம் ஏற்பட்டது. அதனால் விழுந்து தலைக்காயம் ஏற்பட்டது. சில காலம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் உடல் முழுமையாக சிகிச்சை பெறவில்லை. பின்னர் பக்கவாதம், நிமோனியா என தொடர்ச்சியாக பிரச்சினைகள் வந்தன. கடந்த வாரம் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நுரையீரல் செயலிழந்ததால் புதன்கிழமை அவர் உயிரிழந்தார். உயிர்காக்கும் கருவிகளுடன் போராடிய நிலையில் குடும்பம் கருவிகளை நீக்க முடிவு செய்தது. லா புவென்டேயில் பிறந்த கார்சியா, அனிமேஷன் உலகிலும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையிலும் நீண்ட பயணம் செய்தவர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!