பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவுத் தபால் தலை வெளியீடு... துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்!

 
பெரும்பிடுகு முத்தரையார்

தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாகத் தபால் தலை வெளியிட வேண்டும் என முத்தரையர் சமுதாயம் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அந்தக் கோரிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக இன்று புதுடெல்லியில் நினைவுத் தபால் தலை வெளியிடப்பட்டது. இந்தச் சிறப்புத் தபால் தலையைத் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

பெரும்பிடுகு முத்தரையரின் நினைவுத் தபால் தலை வெளியீட்டிற்காகத் தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த நினைவுத் தபால் தலை வெளியிடப்பட்டது.

பெரும்பிடுகு முத்தரையர்

தபால் தலையை வெளியிட்ட பிறகுப் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அரசு தமிழ் மொழிக்கும், பண்பாட்டிற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளையும், இதுவரை உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் அரசர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கவுரவிக்கும் முயற்சிகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவுத் தபால் தலையை வெளியிட்டது, தொடர்ச்சியான அங்கீகார முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார். மேலும், இந்தியா 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மறைக்கப்பட்டத் தலைவர்களை அங்கீகரிப்பது நாட்டின் பண்பாட்டுப் பெருமையை மீட்டெடுக்க உதவும் என சி.பி. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், ராஜ்ய சபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!