நேபாளத்தில் வகுப்புவாத பதற்றம்... இந்திய எல்லை மூடல்!
இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் நேபாளத்தின் சில பகுதிகளில் மதவாத வன்முறை அதிகரித்துள்ளது. இதையடுத்து பர்சா மாவட்டத்தின் பிர்கஞ்ச் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா–நேபாள எல்லை முழுமையாக மூடப்பட்டுள்ளது. அவசர சேவைகளைத் தவிர மற்ற எல்லை தாண்டிய நடமாட்டங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
தனுஷா மாவட்டம் கமலா நகராட்சியைச் சேர்ந்த ஹைதர் அன்சாரி, அமானத் அன்சாரி ஆகிய இருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளி வகுப்புவாத பதற்றத்திற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அந்தக் காணொளி சில மத சமூகங்களை அவமதிப்பதாக இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, உள்ளூர்வாசிகள் இருவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், கமலாவின் சகுவா மாரன் பகுதியில் உள்ள ஒரு மசூதி சேதப்படுத்தப்பட்டது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. போராட்டங்கள் வன்முறையாக மாறி, காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன. கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டதில் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஏழு போலீசார் காயமடைந்துள்ளனர். அச்சம் காரணமாக அங்கு பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
