சமுதாய வளைகாப்பு விழா... அமைச்சர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். அதே போன்று மதுரையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி அறுசுவை உணவு பரிமாறினார்.
தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல்ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் காயத்ரி திட்ட விளக்க உரையாற்றினார்.
விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!