வாகனங்களில் பேட்டரி திருடியதாக புகார்.. மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தேக் கொன்ற கிராம மக்கள்!
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் முர்மா கிராமத்தைச் சேர்ந்த பவன் ராம் (22) என்ற இளைஞர், பக்கத்து கிராமமான டெலியாகியில் கும்பலால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.
டெலியாகி கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியைத் திருட முயன்றதாகக் கூறி, அங்கிருந்த பொதுமக்கள் பவன் ராமைப் பிடித்துள்ளனர். அவரை ஊர் மத்தியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து கிராமத்தினர் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவத்தில் ஒரு திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பவன் ராம் தனது காதலியைச் சந்திக்கவே அந்த கிராமத்திற்கு வந்துள்ளார் என்றும், அதைக் கண்டறிந்த கிராமத்தினர் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, 'பேட்டரி திருடன்' என முத்திரை குத்தி நாடகமாடிச் சம்பவத்தைத் திசைதிருப்ப முயன்றதும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சட்டத்தைக் கையில் எடுத்தவர்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்திற்காக ஒரு இளைஞரைத் திருடன் எனச் சொல்லி அடித்துக் கொன்றது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
