அதிகரித்து வரும் போர் பதட்டங்கள்... 2 மாதங்களுக்கு முழு ஊரடங்கு!

 
ஊரடங்கு
 

வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா   கீழ், இந்த கட்டுப்பாடு இரண்டு மாதங்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது.
 
மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட நீதிபதி ஆர்.எம். குர்பா பிறப்பித்த உத்தரவின்படி, சட்டவிரோத எல்லைக் கடப்புகள் மற்றும் கால்நடைகள், கடத்தல் பொருட்கள், வெற்றிலை, உலர் மீன், பீடி மற்றும் தேயிலை இலைகள் போன்ற பொருட்களை கடத்துவதைத் தடுப்பதே இந்த ஊரடங்கு உத்தரவின் நோக்கமாக கருதப்படுகிறது.  

கிழக்கு காசி ஹில்ஸ், மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மற்றும் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் ஆகிய குறிப்பிட்ட எல்லை மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.சர்வதேச எல்லையை சட்டவிரோதமாக கடக்க விரும்பும் தனிநபர்களின் நடமாட்டத்தையும், சட்டவிரோதமாக ஒன்றுகூடுவதையோ அல்லது சாத்தியமான ஆயுதங்களை எடுத்துச் செல்வதையோ இந்த உத்தரவு கட்டுப்படுத்துகிறது. அதன்படி, பூஜ்ஜியக் கோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் தினமும் இரவு 8:00 மணி முதல் காலை 6:00 மணி வரை அமல்படுத்தப்படும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?