குவியும் பாராட்டுக்கள்... சிறுவர்கள் விளையாட 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய கிராமத்து பெண்!

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் நுவாபாடா மாவட்டத்தில் சிங்கஜார் கிராமத்தில் வசித்து வருபவர் சபித்ரி மஜ்ஹி. இவருக்கு வயது 95.இவர் பல வருடங்களாக விளையாட்டு மைதானம் இல்லாமல் திணறி வந்த கிராமக் குழந்தைகளுக்காக, சபித்ரி மஜ்ஹி தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இந்த நிலத்தில் கிரிக்கெட், கால்பந்து, கபடி என விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இது குறித்து சபித்ரி மஜ்ஹி “எங்கள் கிராமக் குழந்தைகள் விளையாடுவதைக் காணும் போது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. அவர்கள் வெற்றி பெற்றால் என் மகிழ்ச்சி மேலும் கூடுகிறது. நான் அளித்த நிலத்தில் அவர்கள் ஆரோக்கியமாக விளையாடும் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த நிலத்தில் அரசு விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபித்ரி மஜ்ஹி இதற்கு முன்பு தனது நிலங்களில் பள்ளி, கல்லூரி, கோயில் ஆகியவற்றுக்காக இடமளித்தவர். அவரது கணவர் நிலம்பர் மஜ்ஹி 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், தனக்கே உரித்தான நிலங்களை சமூக நலன் கருதி வழங்கும் சபித்ரியின் இந்த உன்னத செயல், சமூகத்திற்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!