சமரசம்... இன்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை சந்திக்கிறார் நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானி!

 
ட்ரம்ப்

எலியும், பூனையுமாக இருந்தவர்களுடன் நட்பு பாராட்ட துவங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இன்று காலை நியூயார்க் நகரத்தின் புதிய மேயராகத் தேர்வான ஸோரான் மம்தானியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேச அனுமதி கொடுத்துள்ளது அமெரிக்காவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது மம்தானியை குறி வைத்து கடுமையாக விமர்சித்திருந்த டிரம்ப், இந்தத் திடீர் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய வம்சாவளி மற்றும் இஸ்லாமிய மரபைச் சார்ந்த முதலாவது நியூயார்க் மேயராக 2026 ஜனவரி 1 அன்று பதவியேற்க உள்ள மம்தானி, மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அதிபருடன் ஆலோசிக்க உள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் டோரா பேகெக் தெரிவித்தார். மம்தானி முன்பு காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களை கண்டித்ததோடு, நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றத்தின் பிடியுத்தரவு அடிப்படையில் கைது செய்வேன் என்ற அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ட்ரம்ப்

இந்த கருத்துகளைத் தொடர்ந்து டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் மம்தானிக்கு எதிராக கடுமையான பிரசாரம் நடத்தியிருந்த போதும், 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் மேயராக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!