உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி காலமானார்!! தலைவர்கள் இரங்கல்!!

 
ஆஷிஸ் முசாபர் அகமதி

 குஜராத் மாநிலம் சூரத்தில் 1932ஆம் ஆண்டில் பிறந்த ஆஷிஸ் முசாபர் அகமதி, அகமதாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக 1964ஆம் ஆண்டு பதவியேற்றார். குஜராத் மாநிலத்தின் சட்டத்துறை செயலராக செயல்பட்ட அகமதி, 1988ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதாவது 25 அக்டோபர் 1994 அன்று இந்தியாவின் 26வது தலைமை நீதிபதியாக பதவியேற்று 24 மார்ச் 1997 வரை பணியாற்றினார். 

ஆஷிஸ் முசாபர் அகமதி

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த காலத்தில், 232 தீர்ப்புகளை எழுதியுள்ளார் மற்றும் 811 பெஞ்ச்களில் ஒரு பகுதியாக இருந்தார். அவர் 1989 இல் உச்ச நீதிமன்ற சட்ட உதவிக் குழுவின் தலைவராகவும், 1990 முதல் 1994 வரை இந்தியாவில் சட்ட உதவித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான குழுவின் நிர்வாகத் தலைவராகவும் பணியாற்றினார். இந்தியாவின் தலைமை நீதிபதி ஆன மூன்றாவது முஸ்லிம் நீதிபதி அஹ்மதி ஆவார். அலிகார் பல்கலைக்கழக வேந்தராகவும் இருந்துள்ளார்.

ஆஷிஸ் முசாபர் அகமதி

இந்த நிலையில் நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் நீதிபதி ஆஷிஸ் முசாபர் அகமதி காலமானார். அவருக்கு வயது90. அவர் வயது மூப்பு மற்றும் உடல் நல குறைபாட்டால் காலமானார். உறவினர்கள் பிரபலங்கள், தலைவர்கள் , பொதுமக்கள் பலர்   அஞ்சலி செலுத்தினர்.  மேலும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web