இந்தியா - பாகிஸ்தான் மோதல் உறுதி... லீக் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி!
கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த புறக்கணிப்பு மிரட்டல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, லீக் போட்டியில் கலந்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து நேற்று இரவு பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், வரும் பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் தேசிய அணி பங்கேற்கும். பன்னாட்டு அளவில் நடந்த ஆலோசனைகள் மற்றும் நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று, கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முதலில் இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறியிருந்தாலும், பின்வரும் அழுத்தங்கள் காரணமாக அந்த முடிவை மாற்றிக்கொண்டது. இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குறிப்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் பாகிஸ்தானிடம் இந்தியாவுடன் விளையாடுமாறு தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்தனர்.
இந்தப் போட்டியைப் புறக்கணித்தால் கடுமையான அபராதம் மற்றும் தரவரிசைப் புள்ளிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை ஐசிசி எடுக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டது. போட்டி நடைபெறும் நாடான இலங்கையின் அதிபர் அனுர குமார திசநாயக்க, பாகிஸ்தான் பிரதமரிடம் பேசி சுமுகத் தீர்வுக்கு வழிவகுத்தார்.

வரும் பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது கொழும்பில் தங்கியுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள், இன்று அமெரிக்காவுடனான தங்களது இரண்டாவது லீக் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்க அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளதால், வீரர்கள் உற்சாகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
