சிரியாவில் மீண்டும் மோதல்.. டிரோன் தாக்குதலில் 7 வீரர்கள் உயிரிழப்பு!
சிரியா அரசுப் படைகளுக்கும், குர்திஷ் ஆயுதக் குழுவினருக்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையிலும், இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய குர்திஷ் தலைமையிலான 'சிரிய ஜனநாயகப் படை' (SDF), அங்கு சிறைபிடிக்கப்பட்ட பயங்கரவாதிகளைக் கண்காணித்து வந்தது.
குர்திஷ் ஆயுதக் குழுவினரைத் தேசிய ராணுவத்துடன் இணைக்க அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் கோபமடைந்த குர்திஷ் குழுவினர், சிறையில் இருந்த பயங்கரவாதிகளின் பாதுகாப்பைத் திரும்பப் பெற்றனர்.
குர்திஷ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை அரசுப் படைகள் அதிரடியாகக் கைப்பற்ற முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. சிரியாவின் ஹசஹா (Hasaka) மாகாணத்தில் குர்திஷ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயுதத் தயாரிப்பு ஆலையை அரசுப் பாதுகாப்புப் படையினர் நேற்று மீட்டனர்.
மீட்கப்பட்ட அந்த ஆலையில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கிருந்து வெளியேறிய குர்திஷ் குழுவினர் ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசித் தாக்கினர். இந்தத் திடீர் தாக்குதலில் சிரிய அரசுப் படையைச் சேர்ந்த 7 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
