குவியும் வாழ்த்துக்கள்... ரஜினிகாந்த் டிராகன் பட இயக்குனருக்கு பாராட்டு!

 
டிராகன்

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரதீப்புடன்  அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உட்பட பல நட்சட்த்திரங்கள்  நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி  21ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. 

டிராகன்

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் 10 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் தெலுங்கு பதிப்பு வெற்றியை பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனைவருக்கும் நன்றி கூறியது படக்குழு. இந்நிலையில் இப்படத்தை ரஜினி பார்த்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனை அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டிராகன்

இது குறித்து அஷ்வத் மாரிமுத்து , “என்ன ஒரு ரைட்டிங் அஷ்வத், ஃபென்டாஸ்டிக்” என ரஜினி பாராட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “நல்ல படம் பண்ணனும், படத்த பாத்துட்டு ரஜினி சார் வீட்டுக்கு கூப்புட்டு வாழ்த்தி நம்ம படத்த பத்தி பேசணும். இது டைரக்டர் ஆகுணும்னு கஷ்டப்பட்டு உழைக்கிற ஒவ்வொரு அசிஸ்டண்ட் டைரக்டரோட கனவு . கனவு நிறைவேறிய நாள் இன்று” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web