காங்கிரஸ் தேர்தல் அறிக்கை... நாளை சத்தியமூர்த்தி பவனில் வெளியீடு!

 
selva selva

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் நான்கு முனைப் போட்டிகளால் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை நாளை (09.04.2026) காலை 11:00 மணியளவில் வெளியிடுகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிக்கையை வெளியிட, அதன் முதல் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக்கொள்வார்.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவரான கார்த்தி ப. சிதம்பரம் தொடக்கவுரை ஆற்றும் இந்த நிகழ்வில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் இந்த முக்கிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. முன்னதாக, மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆனந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் பட்டாளமே கலந்துகொள்ள உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் எனப் பலமான போட்டிகள் நிலவும் சூழலில், காங்கிரஸின் இந்தத் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களுக்கான சிறப்புத் திட்டங்கள் இதில் இடம்பெறும் எனத் தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!