காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை... பேனர் தகராறில் பயங்கரம்!

 
கொலை

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர், சாலையில் வைத்து மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்

சிக்மங்களூரு மாவட்டம் கமலேஷ்வரா பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் கவுடா (38). இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும், அப்பகுதி கிராம பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்தார். கணேஷ் கவுடா நேற்று இரவு கமலேஷ்வரா பகுதியில் உள்ள சாலையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கணேஷ் கவுடாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 3 பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!