கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை!! கொண்டாட்டத்தை தொடங்கிய தொண்டர்கள்!!

 
காங்கிரஸ்
கர்நாடகாவில்  224 தொகுதிகளை கொண்ட  சட்டமன்ற தேர்தல்  மே10ம் தேதி  நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.  இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 73 இடங்களை பிடித்துள்ளது.  காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் தற்போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். குறிப்பாக டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமையகங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  அதே நேரத்தில்  காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை அடுத்து பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோவியில் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசின் சட்டசபைக்கான காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதில்  பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் முடிவுகளை .eci.gov.in, www.eciresults.nic.in, eci.gov.in, results.eci.gov.in ஆகிய  இணையதளங்களில் பார்க்கலாம்.

 

ஓட்டு
224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10 ம்  தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை  தொடங்கும். நாளை பிற்பகலுக்குள் முன்னிலை விவரமும், மாலைக்குள் முழு முடிவுகளும் வெளியாகிவிடும். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் பார்ட்டி,  ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற போன்ற கட்சிகள்  போட்டியிட்டன.

கர்நாடகா
குறிப்பாக பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. அதிக இடங்களில் இந்த 3  கட்சிகள் மட்டும் தான் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மஜத 209 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. 
கர்நாடகம் முழுவதும் 58,545 வாக்குச் சாவடிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாக்குப்பதிவு செய்யப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேர ஆயுத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்  வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web