காங்கிரஸ் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் பீமண்ணா காண்ட்ரே காலமானார்... இன்று மாலை இறுதிசடங்கு!
இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான பீமண்ணா காண்ட்ரே, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது இல்லத்தில் நேற்றிரவு காலமானார். இவரது மறைவுச் செய்தி இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பீமண்ணா காண்ட்ரே நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA), இரண்டு முறை மேலவை உறுப்பினராகவும் (MLC) பணியாற்றியவர். 1992-ஆம் ஆண்டு வீரப்ப மொய்லி அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கர்நாடகாவின் கல்வி மற்றும் கூட்டுறவுத் துறைகளில் இவரது பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக பீதர் பகுதியில் பல கல்வி நிறுவனங்களை நிறுவியவர்.

இவரது மகன் ஈஸ்வர் காண்ட்ரே தற்போது கர்நாடக அரசின் வனத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.இவரது இறுதிச் சடங்குகள் இன்று சனிக்கிழமை ஜனவரி 17ம் தேதி மாலை அவரது சொந்த ஊரான பால்கியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
