தேசிய கீதத்தைத் தவறாகப் பாடிய காங்கிரஸ் தலைவர்கள்... வைரலாகும் வீடியோ!

 
கேரள காங்கிரஸ் தேசிய கீதம்

காங்கிரஸ் கட்சியின் 140-ஆவது நிறுவன நாள் விழா கொண்டாட்டத்தின் போது, கேரள மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் தேசிய கீதம் தவறாகப் பாடப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 140-ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) தலைமையகத்தில் சிறப்புக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தீபா தாஸ் முன்ஷி, பாலோடு ரவி உள்ளிட்ட அக்கட்சியின் மிக முக்கிய மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


விழாவின் தொடக்கமாகக் கட்சியின் கொடி ஏற்றப்பட்ட பிறகு, அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த, ஒலிபெருக்கியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது தேசிய கீதத்தைப் பாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், பாடலின் முதல் வரியிலேயே பிழையான உச்சரிப்பைப் பயன்படுத்தினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் நேர்ந்த இந்தத் பிழையை, அங்கிருந்த தலைவர்களோ அல்லது தொண்டர்களோ சரிசெய்ய முன்வரவில்லை. மாறாக, அந்தப் பிழையான வரிகளைத் தொடர்ந்தே அவர்களும் பின்னணியில் பாடினர்.

இந்நிகழ்வு அங்கிருந்த கேமராக்களில் வீடியோவாகப் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகத் தொடங்கியது. நாட்டின் மிக மூத்த கட்சியான காங்கிரஸின் முக்கிய விழாவில், தேசிய கீதத்தை முறையாகப் பாடத் தெரியாத நிர்வாகிகளை அனுமதித்தது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தேசிய கோடி

இந்தச் சம்பவம் கேரள காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் பலவும் இந்த வீடியோவைப் பகிர்ந்து "தேசிய கீதத்தின் மீது காங்கிரஸ் வைத்திருக்கும் மரியாதை இவ்வளவுதானா?" என விமர்சித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!