காமராஜரை இழிவுபடுத்திய முக்தார் அகமதுவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

 
முக்தார் காங்கிரஸ்

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசிய 'மை இந்தியா' யூடியூப் சேனலை நடத்தி வரும் முக்தார் அகமது என்பவரைக் கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் சண்முகம் கண்டன உரையாற்றினார்.

காங்கிரஸ்

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், முக்தார் அகமதுவின் உருவப் படத்தைத் தீயிட்டுக் கொளுத்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தின் போது முக்தார் அகமது மீது வன்முறையைத் தூண்டும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும்,   தமிழக அரசு அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!