காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதல் … நிர்வாகி மீது பட்டாக்கத்தி தாக்குதல்!
திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அர்ஜுன் (35), திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில், காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறியுள்ளார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினரை வரவேற்க மன்றத்தின் வாசலில் காத்திருந்தபோது, டூவீலரில் வந்த காங்கிரஸ் மாநகர் மாவட்ட கோட்ட தலைவர் தென்னூர் ராமசந்திராபுரத்தைச் சேர்ந்த ராகவேந்திரா (36) என்பவர், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக தன்னை பட்டாக்கத்தியால் தலையில் வெட்டியதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர் ரத்தக் காயமடைந்ததாகவும் கூறினார்.

மேலும், தன்னையும் தனது தாய், சகோதரியையும் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அவர் சென்றதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அர்ஜுன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
