ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்... காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

தென்னிந்திய திரையுலகில் முண்ணனி நடியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத் திரையுலகில் Kirik Party படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த Geetha Govindam செம ஹிட் ஆக அந்த மொழி ரசிகர்களையும் கவர்ந்தார்.
You can never separate goon from Rahul Congressman.
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@RajeevRC_X) March 3, 2025
This pompous overblown #Karnataka MLA from constitution waving @RahulGandhi 's party, wants to "teach a lesson" to an actress.
I want to tell @DKShivakumar and @siddaramaiah to read up constitution - every citizen including… https://t.co/RV27NtFWqL
பின் கன்னடம், தெலுங்கு என 11 படங்களில் நடித்தவர் 2021ம் ஆண்டு சுல்தான் படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார். பின் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தவர் இப்போது குபேரா படத்தில் நடித்துள்ளார். ஹிந்தியில் அனிமல் படம் மூலம் ரூ. 1000 கோடி வசூலை கண்டவர் நடிப்பில் கடைசியாக Chhaava படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவின் மண்டியாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரசி கனிகா நடிகை ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், பெங்களூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அவர் சம்மதிக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
அவருக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்க விரும்புவதாக அவர் கூறினார். தனக்கு ஒரு தொழிலைக் கொடுத்த துறையை மதிக்க அவர் கற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடக துறை மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் இங்கே நடக்கும் விழாவிற்கு வர மறுத்தது கடும் கண்டனத்திற்கு உரியது. அவர் கன்னடத் திரையுலகத்தையும், கன்னட மொழியையும் அவமரியாதை செய்கிறார். நாம் அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டாமா? என காட்டமாக பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!