மர்ம மரணம்... காங்கிரஸ் கட்சி நிர்வாகி சடலம் அழுகிய நிலையில் மீட்பு!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கொட்ட கரண்டி பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். 60 வயதான இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக தனியாக பிரிந்து சென்று விட்டதால் இவர் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார்.
இவர் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர். கடந்த சில ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று திடீரென அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது ராஜ்குமார் சடலமாக கிடப்பது தெரியவந்ததோடு அழுகிய நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. அவர் உயிரிழந்தநிலையில் 4 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் மர்ம மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!