காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா... பாஜகவில் இணைந்தார்!

 
கார்கே கார்கே

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆற்றிய உரை ஒட்டுமொத்த அவையையும் கலகலப்பாக்கியது. முன்னாள் பிரதமரும் மூத்த உறுப்பினருமான எச்.டி. தேவெ கெளடா மற்றும் பிரதமர் மோடி இடையிலான அரசியல் நெருக்கத்தை, கார்கே தனது பாணியில் கிண்டல் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "அரசியல்வாதிகள் நாட்டுக்குச் சேவையாற்ற எப்போதும் சோர்வடைய மாட்டார்கள்" என்று புகழாரம் சூட்டிய கார்கே, சட்டெனப் பேச்சை மாற்றினார்.

தேவெ கெளடாவுடன் தமக்குள்ள 54 ஆண்டுகால நீண்ட கால நட்பை நினைவுகூர்ந்த கார்கே, "அவருடன் பல தருணங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். என்னிடம் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் அவர். ஆனால், இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, அவர் பிரதமர் மோடியைத் திருமணம் (அரசியல் ரீதியாக) செய்து கொண்டார்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதைக் கேட்டதும் அவையில் இருந்த பிரதமர் மோடி உட்பட அனைத்து உறுப்பினர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். சமீபத்திய தேர்தல்களில் தேவெ கெளடாவின் மஜத கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததைச் சுட்டிக்காட்டியே கார்கே இவ்வாறு பேசினார்.

முன்னதாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அவையின் மூத்த தலைவர்களான தேவெ கெளடா, சரத் பவார் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் அனுபவங்கள் நாட்டிற்குப் பெரும் சொத்து என்று பாராட்டிப் பேசினார். ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடியும் உறுப்பினர்களுக்குப் புகழாரம் சூட்டிய பிரதமர், அவர்களின் பங்களிப்பு நாடாளுமன்ற வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்தார். அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு மத்தியிலும், மாநிலங்களவையில் நிலவிய இந்தச் சுமுகமான மற்றும் கலகலப்பான சூழல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!