காங்கிரஸை நம்பாதீர்கள் என விஜய்க்கு விஜயபிரபாகரன் எச்சரிக்கை!
கடலூர் மாவட்டம் பாசாரில் நடைபெற்ற மாநாட்டில் தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் பேசினார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் தே.மு.தி.க.வின் சேவையும் தேவை என்றும், எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களை அரியணையில் அமர்த்தும் என்றும் கூறினார். தே.மு.தி.க. சேரும் இடம்தான் மெகா கூட்டணி, அதுவே வலிமையான கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயகன் திரைப்படம் திரையிடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், விஜய்க்கு தம்பியாகவும் விஜயகாந்தின் மகனாகவும் ஒரு அறிவுரை கூறுவதாக விஜயபிரபாகரன் பேசினார். காங்கிரஸ் கட்சி ஆதரவு தருவதாக பேசினாலும், அந்தக் கட்சியை மட்டும் நம்பிவிட வேண்டாம் என்றார். அது மீனுக்கு தூண்டில் போடுவது போல இருப்பதாகவும், அதில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
நீங்கள் நன்றாக வளர வேண்டும் என்பதால்தான் இந்த அறிவுரை என கூறிய அவர், தான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் என்ன செய்தார்கள் என்பது தனக்கு தெரியும் என்றார். காங்கிரஸ் உங்களுடன் கூட்டணி பேசுவது போல வந்து, பின்னர் தி.மு.க.வுடனே பேரம் பேசுவார்கள் என்றும், அதனால் சினிமா துறையுடன் இணைந்தே செயல்படுவது நல்லது என்றும் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
