26 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி... காங்கிரஸ் பெண் வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

 
காங்கிரஸ்
 

கேரளாவில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகின. இந்தத் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இடவக்கோடு வார்டில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த சி.எம்.பி. கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் சினி, இந்த முறையும் மீண்டும் களமிறங்கினார்.

ஆம்புலன்ஸ்

தொடர்ந்து வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சினி-க்கு எதிராகப் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சுவாதி 1,889 வாக்குகள் பெற்று அதிர்ச்சி வெற்றியைப் பதிவு செய்தார். வெறும் 26 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சினி 1,863 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இந்த வார்டில் 'சினி' என்ற அதே பெயரில் மேலும் இரண்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அவர்களுக்கு மொத்தமாக 44 வாக்குகள் கிடைத்தன. இதுவே சினியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த எதிர்பாராத குறுகிய தோல்வி வேட்பாளர் சினியை மனதளவில் கடுமையாக பாதித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், திடீர் மாரடைப்பே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் கட்சி தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!